tamilpazham
Tuesday, December 12, 2017
Monday, March 6, 2017
*உண்ணாவிரதம் போராட்டம் வெற்றி பெற* *நமக்கு பணிநிரந்தரம் கிடைத்திட*
*உண்ணாவிரதம் போராட்டம் வெற்றி பெற*
*நமக்கு பணிநிரந்தரம் கிடைத்திட*
===========================
பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் 16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்
அந்த உண்ணாவிரத போராட்டத்தில்
தொடக்க பள்ளி சங்கம் முதல் தலைமை ஆசிரியர் சங்கங்கள் வரை உள்ள இருபதுக்கும் மேற்பட்ட
அனைத்து ஆசிரியர் சங்கங்கள்
அனைத்து
அரசு ஊழியர்கள், அரசுபணியாளர்கள்,
அரசு அலுவலர்கள் ஆகிய அனைத்து சங்கங்கள்.
விவசாயிகள் சங்கங்கள்
அமைப்பு சாரா தொழிலாளர் சங்கங்கள்
சமுக ஆர்வலர்கள்.
பிரபலமான எழுத்தாளர்கள் கவிஞர்கள்
பாடலாசிரியர் இயக்குனர்கள் நடிகர்கள்
மத்திய ஆளும் கட்சி, மாநில ஆளும் கட்சி, அதில் பிரிந்த அணிகள், மற்றும் அனைத்து தேசிய கட்சிகள், எதிர் கட்சிகள்,சிறு கட்சிகள் என அனைத்து கட்சிகளின் பொறுப்பாளர்களும்
இவர்கள் அனைவரையும் முறைப்படி அழைத்து
பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தை ஆதரித்து பேச சிறப்பு அழைப்பாளராக பேச வைக்க வேண்டும்.
ஊடகங்கள் பத்திரிகையாளர்கள் அனைவரையும் முறைப்படி அழைத்து மரியாதை செய்து
சிறப்பாக தனியாக கவனிக்க வேண்டும் அப்போது தான் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் Breaking News ஆகவும்.
நமது பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் 16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டார்கள் என்றால் தான் மார்ச்10 ம் தேதி தலைப்பு செய்தியாக நமது கோரிக்கை மாறும்.
உளவு துறையும் 16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று அப்போது தான் அரசுக்கு அறிக்கை தரும்
இது எல்லாம் நடந்தால் தான் நமது பணிநிரந்தரம் கோரிக்கை வெற்றி பெறும். என்பது தான் எதார்த்தமான நிதர்சன உண்மை ஆகும்.
இதை கவனத்தில் கொண்டு 16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள்.
Tuesday, January 10, 2017
வாருங்கள் ஒரு முறை இறக்கலாம் . .(படித்ததில் பிடித்தது )
தலைப்பை பார்த்தவுடன்
பாதிபேர் ஓடியிருப்பார்கள்
மீதிபேர் ஒரு மெல்லிய தயக்கத்துடன் படிக்க ஆரம்பிப்பார்கள்,
என்ன இருந்தாலும்
இறப்பு இல்லையா, கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும்!
ஒருவேளை அப்படி இறந்துவிட்டால் என்னவாகிடப்போகிறது..
அடுத்த நொடியே நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி
வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும்,
கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,
எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள், நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உடனே தகவல் சென்றுவிடும், இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள், இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம், எல்லாம் நேரம்!
ஆளுக்கொரு பக்கம்
மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும் உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள், நமக்கு ஒன்றுமே புரியாது, அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று!
உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம் ஆனால்
எதுவுமே முடியாது
அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்!
பாவம் எல்லோரும்
tired ஆகி tired ஆகி அழுதுகொண்டே இருக்கிறார்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது!
இதோ நாம் எதிர்பார்த்த
அந்த freezer box வந்துவிட்டது, கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும் ஆனால் நம்மால் தான் உணரமுடியாது, ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள், இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள் விடியவிடிய விழித்திருந்து உறங்கலாம் என்று நினைக்கும்போது தாரைதப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது, நல்லவேளை நாம் உள்ளே இருப்பதால் பெரிதாக சத்தம் ஒன்றும் கேட்காது, சொந்தபந்தங்கள் எல்லாம் வரத்தொடங்கிவிட்டன,
பாவிமக்கள் இந்த பாசத்தையெல்லாம் எங்கு வைத்திருந்தார்களோ தெரியவில்லை அழுதுகொண்டே ஓடிவருகிறார்கள், இவ்வளவு நேரத்திற்கு பிறகு தமிழில் நமக்கு பிடிக்காத அந்த வார்த்தையை ஒருவன் சொன்னான்,
'பொணத்தை ' கொஞ்சம் தள்ளிவைங்க பந்தல்போடனும்,
நம்ம அப்பா எவ்வளவு அழகா பெயர் வச்சிருந்தாலும் செத்தபின்னாடி பத்துகாசுக்கு தேறாது!
கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, நம் பகையாளிகள் கூட நம்மை ரொம்ப நல்லவன் என்று certificate தருகிறார்கள், ஒருபக்கம் தாரை தப்பட்டை
இன்னொரு பக்கம்
மக்கள் வெள்ளத்தில் மாலை மரியாதைகள் இன்னொரு பக்கம் பட்டாசுசத்தம், எல்லாம் இருந்தும் என்ன பிரயோஜனம்!?
அத்தனைபேரு முன்னாடி அரைகுறை dress சோட நம்மை குளிக்கவச்சி மானத்தை வாங்கிட்டாங்களே!!
என்ன பண்றது
பொணமா பொறந்தாலே இப்படிதான்!
ஒருவழியாக எரிப்பதற்கோ புதைப்பதற்கோ எடுத்துசெல்கிறார்கள்,
இவ்வளவு நாள் நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் சேர்த்து நாலுபேர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்!
கடைசியில் நம்மை எரித்தேவிட்டார்கள்!
இனி எங்காவது நாய் ஊளையிட்டால் கூட நாம்தான் வந்திருக்கிறோம் என்று புளுக ஆரம்பித்துவிடுவார்கள்!
அடுத்த நாள் வீட்டுக்கு சென்று பார்த்தால்
அழுகை குறைந்து விசும்பலாகிவிட்டிருக்கும்
அதற்கு அடுத்த நாள் விசும்பலும் குறைந்திருக்கும்
இப்படி நாளாக நாளாக நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!
இதில் இன்னொரு சிறப்பு செய்தி என்னன்னா
நாம் இறந்ததை யாரோ
Facebook ல் போட
மொத்தம்
4000 likes(விருப்பங்கள்)
அடப்பாவிகளா,
அப்போ அத்தனைபேரும் எப்போ போவான்னு wait பண்ணிட்டே இருந்தீங்களா?!
இவ்ளோதாங்க வாழ்க்கை
புது status வர்றவரைக்கும் தான் பழைய status க்கு மதிப்பு! நம்ம வாழ்ந்த வாழ்க்கைதான் Status!
யாரையும் காயப்படுத்தாம எல்லோரும் விரும்புகிற மாதிரியான சிறந்த வாழ்க்கையாக வாழ்ந்தால்
ஏகப்பட்ட likes வரும்!
அதுமட்டுமில்லாம என்னைக்காவது யாராவது அந்த சிறந்த status(வாழ்க்கை) சை share பண்ணிட்டே இருப்பாங்க
திரும்பத்திரும்ப அந்தநினைவுகள் இந்த உலகத்துல சுத்திகிட்டே இருக்கும்!
ஒவ்வொரு இறப்பின் போதும் எத்தனையோ கனவுகளும் ஆசைகளும்
சேர்ந்தே புதைந்து போகின்றன!
இப்படி ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும்
70,000 பேர் உயிர்துறக்கிறார்கள்!
நாளைய விடியல் நமக்கானது என்கின்ற
எந்த உத்திரவாதமும் இல்லாதபோது
நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும், பகையோடும், பாவத்தோடும் நம் வாழ்க்கையை வாழவேண்டும்!
அர்த்தமுள்ள
வாழ்க்கையை வாழ்வோம் !
சீக்கிரம் எந்திரிங்க
எரிச்சிடப்போறாங்க! #அஷோக்குமார்
Friday, January 6, 2017
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கைது
06/01/2017 ,வெள்ளிக்கிழமை . .சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பணி நிரந்தரம் வேண்டி கோரிக்கைகள் வைத்து உண்ணாவிரதம் மேற்கண்ட ஆசிரியர்களை தமிழக காவல்துறை இன்று 3:00 மணியளவில் கைது செய்ய பட்டனர் . ..
Tuesday, July 19, 2016
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தரம் வேண்டும் பேரணி . .
கவன ஈர்ப்பு பேரணியில்(22/07/2016)வெள்ளிக்கிழமை,நேரம் மதியம் 12am - 04pm நமது பணி நிரந்திரம் வேண்டி கையில் பிடிக்க வேண்டிய வாசகங்கள் கீழே
*கருணைத்தாயே கருணை செய்யுங்கள் நிரந்தரம் செய்துகருணை செய்யுங்கள்*
*ஒளிஏற்று ஒளிஏற்று தமிழக அரசே எங்கள் வாழ்வில் ஒளி ஏற்று*
*உதவிடு உதவிடு தமிழக அரசே எங்களை பணிநிரந்தரம் செய்து உதவிடு*
*உத்தரவிடுங்கள் தாயே முழு நேரம் ஏற்க உத்தரவிடுங்கள்*
*துறப்போம் துறப்போம் பகுதி நேரம் துறப்போம் ஏற்போம் ஏற்போம் முழு நேரம் ஏற்ப்போம்*
*ஒளி ஏற்றுவோம் ஒளி ஏற்றுவோம் மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்*
*ஒளி ஏற்றுங்கள் ஒளி ஏற்றுங்கள் எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள்*
*மாற்றுங்கள் மாற்றுங்கள் எங்கள் வாழ்வை மாற்றுங்கள்*
*வறுமையில் வாடும் எங்களுக்கு உங்கள் கருணை வேண்டும்*
*ஆண்டவன் அளிப்பது பெரும் வரம். எங்களை ஆளும் அம்மா அளிக்க வேண்டும் நிரந்தரம்*
Wednesday, May 18, 2016
அரசு கவின்கலைக் கல்லூரியில் அரசு கவின்கலைக் கல்லூரியில் 2016-17ம் ஆண்டிற் கான பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
அரசு கவின்கலைக் கல்லூரியில் அரசு கவின்கலைக் கல்லூரியில் 2016-17ம் ஆண்டிற் கான பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டை இருப்பிடமாக (See Advt 18-05-2016 ; Dinathanthi Paper) கொண்டிருக்க வேண்டும். 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னை அல்லது கும்பகோணம் கல்லூரிகளில் விண்ணப்பக்கட்டணம் வரைவோலையை (DD) நேரடியாகவும் செலுத்தி விண்ணப்பம் பெறலாம். அந்தந்த கல்லூரிகளுக்கு சேர தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். DD in favour of "The Principal, Government college of fine arts, Chennai – 600 003" or "The Principal, Government college of fine arts, Kumbakonam – 612 002" (SC/ST : Rs.50 Others Rs.100) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2016 ஜூன் 20ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். கும்பகோணம் கல்லூரி வளாகத்தில 23-05-2016 முதல் நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது. கூடுதல் தகவல்கள் அறிய Chennai:044-25610878, Kumbakonam: 0432-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டை இருப்பிடமாக (See Advt 18-05-2016 ; Dinathanthi Paper) கொண்டிருக்க வேண்டும். 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சென்னை அல்லது கும்பகோணம் கல்லூரிகளில் விண்ணப்பக்கட்டணம் வரைவோலையை (DD) நேரடியாகவும் செலுத்தி விண்ணப்பம் பெறலாம். அந்தந்த கல்லூரிகளுக்கு சேர தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். DD in favour of "The Principal, Government college of fine arts, Chennai – 600 003" or "The Principal, Government college of fine arts, Kumbakonam – 612 002" (SC/ST : Rs.50 Others Rs.100) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2016 ஜூன் 20ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். கும்பகோணம் கல்லூரி வளாகத்தில 23-05-2016 முதல் நுழைவுத்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புக்கள் நடைபெறுகிறது. கூடுதல் தகவல்கள் அறிய Chennai:044-25610878, Kumbakonam: 0432-2481371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.