ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து அப்பெண் கருவுற்றாள். உடனே கணவன் ஆனந்தக் கூத்தாடினான்.ஊரையே அழைத்து விருந்து வைத்தான். மனைவியை நன்றாக கவனித்துக் காெண்டான்.
இப்படியே மூன்று மாதங்கள் சென்றது.ஒரு நாள் பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பதற்காக கணவன் ஒரு சாேதிடரை நாடிச் சென்றான். அப்பொழுது தான் விதி சாேதிடர் ரூபத்தில் விளையாடியது.
சாேதிடர் அவனது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து விட்டு இக்குழந்தை பிறந்த உடன் "குழந்தையின் தகப்பன் "இறந்து விடுவார் என்று கூறினார். இதைக் கேட்ட அக்கணவன் மிகுந்த அதிர்ச்சியுற்றான். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் காெண்டு அழுதான். அவன் நேராக வீட்டிற்கு சென்று மனைவியிடம் நடந்ததை கூறினான்.
இச்செய்தி கேட்டவுடன் அவன் மனைவி மயக்கம் பாேட்டு விழுந்து விட்டாள்.உடனே கணவன் பதறி பாேய் தண்ணீர் தெளித்து மனைவியின் மயக்கத்தை தெளிய வைத்தான்.
மயக்கம் தெளிந்தவுடன் மனைவி பேயறைந்தவள் பாேல் காணப்பட்டாள்.முகம் மிகவும் வெளிறிப் பாேய் இருந்தது. கணவனிடம் உடனே கருவை கலைத்து விடலாம் என்றாள்.
கணவன் உடனே சற்று பாெறுமையாக இரு இன்னும் நாலைந்து சாேதிடரை பார்க்கலாம் என்று சாெல்லி விட்டு அதன்படியே சில சாேதிடர்களை பார்த்தான். அனைவரும் அவனது ஜாதக பலனை பார்த்து விட்டு முதல் ஜாேதிடர் சாென்னதையே சொன்னார்கள்.கணவன் உடனே மனம் தளர்ந்து பாேய் விட்டான்.
அவனது மனைவியின் ஆலாேசனைப்படியே இருவரும் கருவை கலைக்க ஒரு மருத்துவரை நாடிச் சென்றார்கள்.மருத்துவர் மனைவியை பரிசாேதித்து விட்டு கரு வளர்ந்து விட்டது.இனி மேல் கலைக்க முடியாது என்று கூறி விட்டார்.
வீட்டிற்கு வந்தவுடன் அன்றிரவே அவன் மனைவி தற்காெலைக்கு முயன்றாள்.கணவன் அவளை காப்பாற்றி,அவளுக்கு "விதியை மதியால் வெல்லலாம்" எனஆறுதல் கூறி விட்டு இதற்கு மேல் அவள் இந்த மாதிரி செய்யாமலிருப்பதற்க்காக மூன்று பேரை காவலுக்கு வைத்து விட்டான்.அவனும் அவள் கூடவே இருக்க ஆரம்பித்தான்.
கணவனுக்காக தினந்தாேறும் காேவில் கோவிலாக அர்ச்சனை செய்யப்பட்டது. சர்வ மத பிராத்தனைகளும்
நடத்தப்பட்டன.
அவன் மனைவி மட்டும் நாளுக்கு நாள் மிகுந்த பதட்டமாகவே காணப்பட்டாள். நாளுக்கு நாள் அவள் முகத்தில் பீதி அதிகரித்தது.கணவனாே நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டான்.
அந்த நாளும் வந்தது. மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மனைவியின் உடல் மட்டும் பீதியின் காரணமாக, நடுக்கத்துடன் இருந்தது. குழந்தையும் பிறந்தது..!!!
குழந்தை பிறந்த....
உடனே....
உடனே.....
உடனே.....
உடனே....
"பக்கத்து வீட்டுக்காரன் மண்டையை பாேட்டு விட்டான்"
😝😜😛😜😝😛😜😝😛
இந்த பாருங்க மக்களே எனக்கு அனுப்புனவன் இப்படி தான் அனுப்புனான் என் மேல தப்பு இல்லை..
No comments:
Post a Comment