Monday, July 13, 2015

2014, மே 16 அன்று முழுப் பெரும் பான்மையுடன் பாஜக தேர்தலில் வென்றதை அறிந்த ஒரு மோடி ரசிகர் ஆனந்தக் கூத்தாடி, மயங்கி விழுந்து, கோமா நிலைக்குப் போய்விட்டார்.

2014, மே 16 அன்று முழுப் பெரும் பான்மையுடன் பாஜக தேர்தலில் வென்றதை அறிந்த ஒரு மோடி ரசிகர் ஆனந்தக் கூத்தாடி, மயங்கி விழுந்து, கோமா நிலைக்குப் போய்விட்டார். சமீபத்தில் திடீரென்று கோமாவில் இருந்து, சுய நினைவுக்கு வந்தார்.

14 மாதங்கள் கடந்துவிட்டதை அறிந்த பின்னர், மருத்துவரிடம் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்...

டாக்டர், ஊழலற்ற இந்தியாவுல இருக்கறது எப்படி இருக்குது?

ராபர்ட் வதேரா எந்த சிறையில் இருக்காரு?

ராகுல், சோனியா சிறையில் இருக்காங்களா அல்லது இத்தாலிக்குத் தப்பி ஓடிட்டாங்களா?

நான் லக்னோ போகணும்; புல்லட் ரயில், விமானம் எது மலிவா இருக்குது?

சுவிஸ் வங்கிகளில் இருந்து நம்ம நாட்டுக்கு எவ்வளவு கறுப்புப் பணம் திரும்பி வந்தது?

ஒவ்வொரு இந்தியரும் மோடியிடமிருந்து 15 லட்சங்கள் பெற்ற பிறகு, ‘வறுமை' சுத்தமா ஒழிஞ்சிருக்குமே?

அமெரிக்க டாலரின் மதிப்பு 35 ரூபாய்க்கு வந்துடுச்சா?

பெட்ரோல், டீசல், கேஸ், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு எல்லாம் விலை குறைஞ்சி இந்தியர் கள் சந்தோஷமா இருக்காங்களா?

பாகிஸ்தான் பயந்து நடுங்கி, தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிய பிறகு அவருக்கு என்ன ஆச்சு?

விவசாயிகள்கிட்ட இருந்து காங்கிரஸ் வலுக்கட்டாயமா அபகரித்த நிலங்களை மோடி அவங்ககிட்டயே திருப்பிக் கொடுத்துட்டதால விவசாயிகள் மகிழ்ச்சியா இருக்கறாங்களா?

- சரமாரியாக இவ்வளவு கேள்விகளைச் சமாளிக்க முடியாத மருத்துவர் பாவம் கோமா நிலைக்குப் போய்விட்டார்!

No comments:

Post a Comment