பகுதிநேர சிறப்பாசிரியர்களின்கோரிக்கைகள் தமிழக அரசால் நிராகரிப்பு ?
அன்பான பகுதிநேர சிறப்பாசிரியர்களே !
உரிமைக்காக குரல் கொடுக்க வாரீர் !!!
பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகள் கடந்த நான்காண்டுகளாக தமிழக அரசிற்கு ஆதரவாகவே பல கட்டங்களாக முன்வைக்கப்பட்டது. ஆனால் பொங்கல் போனஸ், அகவிலைப்படி உயர்வு போன்ற எந்த நடவடிக்கைகளிலும் நமக்கு மேலும், கீழும் உள்ள அனைவருமே கவனிக்கப்பட்டபோதும் 'பகுதிநேர சிறப்பாசிரியர்கள்' என்ற சொல் கூட அரசினால் பயன்படுத்தப்படவில்லை. இன்றுவரை அப்படி ஒரு பிரிவினர் இருப்பதையே அரசு கண்டுகொள்ளவில்லை. நாம் அரசிற்கு ஆதரவாகவே பல வருடங்களாகப் போராடி வந்தபோதிலும் இன்றைய நிலையில் நல்ல நிலையில் இருக்கும் அனைத்து பிரிவினருமே இன்று போராடத்துவங்கிய நிலையில் நாம் இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிட்டோம்.
இன்றைய நிலையில்கூட விழித்தெழாவிட்டால் பின் அடிமை வாழ்க்கையே நிரந்தரமாகிவிடும். அரசியல் சதுரங்கத்தில் அடிபட்டுப்போய் விடுவோம்.
எனவே உரிமைகளை வென்றெடுக்க ஒற்றுமையுடன் தயாராவீர் ! இன்றைய நிலையில் போராட்டம் ஒன்றே தீர்வு. இதுவரை நாம் எடுத்த அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அனைத்துமே தோல்வியில் முடிந்துவிட்டது. இனி நம் வாழ்க்கை நம் கையில். நமக்கு எந்த இயக்கங்களும் ஆதரவளிக்கவில்லை.
ஒற்றுமை - போராட்டம் - வெற்றி!!! அணிதிரள்வீர்... முடிவெடுப்பீர்..
No comments:
Post a Comment