அன்பு நண்பர்களுக்கு முக்கிய செய்தி.!
நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம்
ஒன்றை அமுல் படுத்தபட்டுள்ளது.
செல்வமகள் திருமணத்திட்டம் என
அழைக்கப்படும் இத்திட்டத்தில்
பத்து வயதிற்க்கு உட்பட்ட 02/12/2003
பிறகு பிறந்த பெண் குழந்தைகள்
பதிவு செய்ய
தகுதி பெற்றவர்களாவர்.!
முதன் முதலாக ₹1000 ஆயிரம் ரூபாய்
டெபாசிட் செய்து உங்கள்
குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைக்கலாம்..!
அதன் பிறகு மாதம் 100 ரூபாய் மட்டும்
செலுத்தி வர வேண்டும்.இது 21
வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின்
திருமணத்திற்காக ₹6,50,000-/-
கிடைக்கும் .மத்திய அரசின் சிறப்பான திட்டம்
அனைத்து பெண்குழந்தைகளுக்கும்
கிடைக்கப்பெற்று வளமான
வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
மிக இலகுவான விண்ணப்ப படிவம்
பூர்த்தி செய்ய தேவையானவை.!
(1) தந்தையின் புகைப்படம் ஒன்று.மற்று இருப்பிடம்
உறுதி செய்ய அடையாள அட்டை.
(வாக்காளர் அட்டை. அல்லது ஆதார்
அட்டை நகல் ஓன்று)
(2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று
நகல்
(3)₹1000 ஆயிரம் ரூபாய் பணம்.!
இது அனைத்து அஞ்சலகத்திலும்(post
office)கிடைக்கப்பெறும்.!
Sunday, May 31, 2015
செல்வமகள் திருமணத்திட்டம்
சச்சின் போட்ட "பிரேக்"...
ஒரு நாள் முழுவதும் தலைவலியில் தத்தளித்த அஞ்சலி! http://newshunt.com/share/40208807 Source: OneIndia Tamil
Print for sale
Saturday, May 30, 2015
Girls area ! !!!
56 girls died because of using whisper, stayfree,
etc. One Single pad for the whole day b'coz of the
chemical used in Ultra Napkins... which converts
liquid into gel...it causes cancer in bladder &
uterus. so plz try to use cotton made pads and if
you are using ultra pads, Plz change that with in 5
hours, per day, atleast. If the time is prolonged the
blood becomes green & the fungus formed gets
inside the uterus & body.
plz don't feel shy to fwd this msg to all girls and
even boys so that they can share with their wives n
friends, whom they care for.
-AIIMS
Kick off "Breast Cancer".
Nurse ur baby.
Wash ur bra daily.
Avoid black bra in summer
Do not wear a bra while sleeping.
Do not wear an under wire bra very often.
Always cover ur chest completely by ur dupatta or
scarf when u are under the sun.
Use a Deodrant not an anti perspirant.
This is a public service msg from Tata Cancer
Hospital.
Pass it 2 all the ladies you care for without
hesitating. Awareness is important
I care for you. Forward to other girls u know..
Attention grls,Dont take head bath in first3 days of
periods,its dangerous
Its medicaly proven dt,80% females die during
delivery due to swelling in uterus walls caused bcz
of bathng in d early days of ur menstrual cycle.
plzz dnt hesitate to inform othr femals fwd to evry
grl on ur list..!!.....
I'll start wth u:)
காமெடி ஆப் தி டே
ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா...”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து...”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
Friday, May 29, 2015
தமிழர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் !!!
தமிழர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் !!!
தமிழ்நாட்டின் மாநில:
பறவை : பஞ்சவர்ண புறா
விலங்கு : வரையாடு
மலர் : செங்காந்தள்
விளையாட்டு : சடுகுடு
அரசின் சின்னம் : திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்
1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)….
வாஸ்தவம்தான்
இந்தியா மூன்று பக்கம் ஊழலாலும்,
ஒரு பக்கம் கடனாலும் சூழப்பட்ட
நாடு...
தோசை கல்லு உள்ளே இருந்தால்
உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால்
சாதா ஹோட்டல்..
வாக்கிங்
போறது எளிதானது தான்...
வாக்கிங் போக
எந்திரிக்கிறது தான்
கஸ்டமானது..
உலகத்துலயே ஸ்பீட் பிரேக்
ஓரத்துல
ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள
தவிர யாருக்கும் வராது..
கீழே விழுந்ததும்
அடிபடவில்லை என்பதை விட,
யாரும்
பார்க்கவில்லை என்பதே நிம்மதி..
மதம் மாறினால் தான் கடவுள்
ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள்
இல்லை, கட்சித் தலைவர்..
ப்யூட்டி பார்லர் போன
மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன
அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..
இந்த ஜெனரேஷன்ல
ஆல்கஹாலுக்கு அடிமையானவன
விட ஆன்ட்ராய்டுக்கு
அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.
பால்விலை கூடுனது கூட
கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட
போறாங்கேனுதான் திக்
திக்குனு இருக்கு ...
# டெய்லி நாலு டீ குடிப்போர்
சங்கம
ஃபேஸ்புக் டுவிட்டர் பக்கமெல்லாம்
வராதவர்கள் தன் வாழ்க்கையில் முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்
என்று அர்த்தம
இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம்
எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு,
இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம்
என்று தான் எண்ணுகிறோம
ATM - Anju Time Mattum
(அஞ்சு டைம் மட்டும்)
குழந்தைங்க நம்மகிட்ட
கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்
செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..
கிணத்த
தூர்வாருவோம்னு கெளம்புனாங்கெ!!
இப்ப
கெணத்தகாணோம்னு சொல்றாங்கெ!!
இவனுகளே மண்ண
போட்டு மெத்திருப்பானுகளோ!!
# 300பேரின் சுவிஸ் பணம் மாயம்!!
காய்கறி விலை மளமளவென
உயர்ந்துவரும் நிலையில்,
கீரை விலை ஏறாமல் சில்லறயில்
கிடைப்பது, நம் உடல்
ஆரோக்கியத்துக்க
ு கொடுக்கப்பட்டிருக்கும்
கடைசி வாய்ப்பு..
ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9
மணி வரைக்கும் தூக்கம் வரும்
சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல
வராது # விதி
பியூட்டி பார்லர்க்கும்
ஃபுல்லா மேக்அப் போட்டு தான்
போகனுமா?
என்னம்மா இப்படி பண்றிங்களேமா
தூய்மை இந்தியாதிட்டம்!!
தேவையான பொருட்கள்:
வெளக்கமாறு 1
கேமரா 4
மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது
என சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு
# அப்டியே நெட் கட்டணத்தயும்
உயர்த்தகூடாதுன்
னு உத்தரவு போட்ருங்கயா.....
Thursday, May 28, 2015
இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் இவர்கள்தான்... கொஞ்சம் படிங்க பாஸ்
இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர்கள் இவர்கள்தான்... கொஞ்சம் படிங்க பாஸ்! http://newshunt.com/share/40097493 Source: OneIndia Tamil
மனைவி அமைவதெல்லாம்
மனைவி அமைவதெல்லாம்
சாதாரணமாக மனைவிக்குப் பயப்படும் ஆண்களைப் பற்றி நிறைய நகைச்சுவை துணுக்குகள்உண்டு.
வளமை மிக்க எமதா்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. அதைவிட முக்கியமான சிக்கல் அந்தப் பெண்மணி எமனை ஆசையாக இறுக்கி அணைத்தால் எமனுக்கு மூச்சு திணறியது. அவ்வளவு அழுத்தமான அணைப்பு. பாசத்தோடு மனைவி அணைக்கும் போதெல்லாம் எம பாசத்தோடு இருந்த எமனுக்கே மரண பயம் வரத் தொடங்கியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தொியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீா் விட்டு எமதா்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊா் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான். எப்படி கதை ?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
(சுகி சிவம் எழுத்தில் ரசித்தது)
Wednesday, May 27, 2015
இயற்கை மருத்துவம் :-
இயற்கை மருத்துவம் :-
******************************
1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும்
""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும்
""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும்
""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும்
""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும்
""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும்
"" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க
"" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""துளசி.""
16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு
""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும்
""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும்
"" பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
(முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""
25) முகம் அழகுபெற
""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும்
"" புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும்
“கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.
கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..
Tuesday, May 26, 2015
Stop eating magi noooodooooles!
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் நமது மிக முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தப்பட்டது.
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்
கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?
"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.
"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்."
"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".
"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
"சரி"
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?
ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?
"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?" –
அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.
"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"
"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்"
"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க முடியாதே?"
"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.
"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.
"CR-னா?"
"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."
அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.
"இதுக்கு அவன் ஒத்துபானா?"
"ஒத்துகிட்டு தான் ஆகணும்.
முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"
"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."
"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு."
"அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."
"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –
அப்பா குழம்பினார்.
"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை."
"பாவம்பா"
"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"
"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."
"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"
"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."
"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"
"வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு"
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"
"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.
புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."
"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"
"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
"கிளையன்ட் சும்மாவா விடுவான்?
ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"
"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."
"எப்படி?"
"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"
"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்."
"அப்புறம்?"
"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."
"அப்புறம்?"
"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"
புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.
"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா"
Monday, May 25, 2015
தங்க மூஞ்சூறுவை,
ஒரு இளைஞன்... வயது 18. பெற்றோர் இல்லை. யாரோ ஒருவர்குழந்தையாக இருக்கும் போது எடுத்து வளர்த்தார். அவரும் போன பிறகு, அநாதையானவன் ஒரு பிள்ளையார் கோயில் வாசலில் தங்கினான். அங்கு வரும் யார் யாரோ கொடுத்த உணவில் வளர்ந்தான். பிள்ளையாரப்பா! எனக்கு ஒரு நல்லவழி காட்ட மாட்டாயா? என வேண்டுவான். பிள்ளையார் அவனுக்கு அருள் வழங்கி நினைத்து விட்டார் போலும்! ஒருநாள், பணக்காரர் ஒருவர் கண்ணில் பட்டான். அவனை ஏனோ அவருக்குப் பிடித்துப் போனது. அவனுக்கு உதவும் எண்ணத்துடன், நாளை காலை என் வீட்டுக்கு நீ வா! என்றார். விடிந்ததும் பணக்காரர் வீட்டுக்குப் போனான். அவர் கோபத்துடன் கத்திக்கொண்டிருக்க, ஒருவர் கை கட்டி அவர் முன் நின்றிருந்தார். மூலதனத்தையே இழக்கும் விதத்தில் முட்டாள் தனமான தொழில் செய்திருக்கிறாயே? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது உனக்குத் தெரியாதா? அங்கே தெருவில் கிடக்கிறது பார் செத்த மூஞ்சூறு! நினைத்தால் அதை கூட வைத்துக் கொண்டு கூட ஒருவன் பணக்காரனாகி விட முடியும், என்று சத்தம் போட்டார். இளைஞன் பயந்து போனான்.
பணக்காரர் பார்ப்பதற்குள் அங்கிருந்து நகர்ந்து விட்டான். ஒருகணம் யோசித்த அவன், தெருவில் கிடந்த செத்த மூஞ்சூறை கையில் எடுத்துக் கொண்டான். கடைத் தெருவிற்குச் சென்றான். அவனைக் கண்ட கடலை வியாபாரி, தான் வளர்க்கும் பூனைக்கு உணவாக அதைப் பெற்றுக் கொண்டு கொஞ்சம் பொரியும், கடலையும் கொடுத்தார். அதைச் சாப்பிட ஒதுக்குப் புறத்தில் இருந்த அரசமரத்தடி பிள்ளையார் அருகில் உட்கார்ந்தான். அங்கே ஒருவன், காட்டுக்குப் போய் விறகு வெட்டி வந்த களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். அவன் மீது இளைஞன் இரக்கம் கொண்டான். தன்னிடமிருந்த பொரி, கடலையில் அவனுக்கு கொஞ்சம் கொடுத்தான். அவன் மீது விறகு வெட்டிக்கு அன்பு வந்தது. நன்றியுடன் ஒருகட்டு விறகை கொடுத்தான். இளைஞன் அதை விற்றுக் காசாக்கினான். அந்த காசுக்கு கடலைக்காரரிடம் போய் கடலை வாங்கிக் கொண்டு மரத்தடிக்கு வந்தான். அங்கு வரும் விறகு வெட்டிக்கெல்லாம் கடலையும், தண்ணீரும் கொடுத்தான். அதற்கு ஈடாக அவர்களும் ஆளுக்கு கொஞ்சம் விறகு கொடுத்துச் செல்ல ஆரம்பித்தனர். விறகுகளை ஓரிடத்தில் சேர்த்து வைத்தான். மழைகாலம் வந்தபோது, விறகுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது. தன்னிடமிருந்த விறகுகளை நல்ல விலைக்கு விற்று பணம் சேர்த்தான். அதைக் கொண்டு சிறு மளிகைக்கடை தொடங்கினான். அவனது நேர்மையான வியாபாரம் கண்ட ஊரார் அவனை நாடி வந்தனர். பத்து ஆண்டுகளில் நல்ல நிலையை எட்டினான். தன் வாழ்வுக்கு ஒரு மூஞ்சூறுவின் மூலம் அடித்தளமிட்ட பணக்காரருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. தங்கத்தில் மூஞ்சூறு ஒன்று செய்து கொண்டு அவரைப் பார்க்கப் புறப்பட்டான். நன்றியுணர்வுடன், நடந்ததை எல்லாம் சொன்னான். அவர் வியந்து போனார். தன் ஒரே மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார். பணக்காரருக்கு கொண்டு வந்த தங்க மூஞ்சூறுவை, தன்னை வாழ வைத்த பிள்ளையாருக்கு காணிக்கையாக்கினான்.
JEGADEES.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ்
செயல்பட்டு வரும் கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளில் காலியாக
உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர்
அல்லாத பணியிடங்களை நேரடி
நியமான மூலம் நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன்
மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 4339
பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:
அதிகாரிகள் மற்றும் ஆசிரியரல்லாத
பணிகள்: 585
பணிகளின் பெயர்:
1. துணை முதல்வர் - 30
2. நிதி அலுவலர் - 01
3. உதவியாளர் - 75
4. கிளார்க் (UDC)- 153
5. லோயர் டிவிஷன் கிளார்க் (LDC) - 312
6. இந்தி மொழிபெயர்ப்பாளர் - 05
7. சுருக்கெழுத்தர் கிரோடு-II - 08
8. உதவி ஆசிரியர் - 01
ஆசிரியர் பணி மற்றும் காலியிடங்கள்:
3754
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT)
(குரூப் பி பணி) - 387
பயிற்சி பட்டதாரி ஆசிரியர்கள் (TGT)
(குரூப் பி பணி) - 654
இதர கற்பித்தல் பணியிலிருந்து
(குரூப் பி பணி) - 74
முதன்மை ஆசிரியர் மற்றும் மாற்ற
அழைப்பு விடுத்தது (இசை) (குரூப்
பி பணி) - 2639
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, செயல்திறன்
தேர்வு, திறன் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வில் பெறும்
மதிப்பெண்கள் அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: துணை முதல்வர்
மற்றும் நிதி அலுவலர் பணிக்கு
ரூபாய் 1,200, மற்ற அனைத்து
பணிகளுக்கு ரூபாய் 750.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம்
உள்ளவர்கள் கேந்திரிய வித்யாலயாவின்
அதிகாரப்பூர்வ இணையதளமான
www.kvsangathan.nic.in என்ற
இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 22.06.2015