Monday, May 11, 2015

பகுதி நேர ஆசிரியர்கள் கவனத்திற்கு.!!!!


Monday, May 11, 2015
ஜெ., உள்ளிட்ட நான்கு பேரும் விடுதலை - கர்நாடக ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு - தினமலர்

  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.

   ஜெ., மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அவர் மீதான தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். தீர்ப்பை கேட்ட அ.தி.மு.க,. வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

   1991-96 ல் முதல்வராக இருந்த ஜெ., 66. 5 கோடி சொத்து சேர்த்ததாக ஜெ., மற்றும் இவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப்பட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக சிறப்பு கோர்ட் நீதிபதி மைக்கேல் குன்கா விசாரித்தார். வழக்கில் ஜெ.,வுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி அபராதமும் விதித்தார். மேலும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தலா 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

    இந்த தண்டனையை அடுத்து ஜெ., முதல்வர் பதவியை இழந்தார். தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ஜெ., வுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. ஜாமின் பெற்ற நாள் முதல் ஜெ., வீ்ட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார். அரசு மற்றும் கட்சி சார்பில் நடக்கும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அப்பீல் வழக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். 900 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி கோர்ட் அறையில் வாசித்தார்.

  இவர் அளித்த தீர்ப்பில் ; ஜெ., அப்பீலை ஏற்று கொண்டார். ஜெ., 4 ஆண்டு சிறை தண்டனை ரத்ததானது. ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் விடுதலை 

No comments:

Post a Comment