டிவி மெக்கானிக் ஆவது எப்படி.....
டிவிமெக்கானிக்கின் முக்கிய மூலதனமே பொய்தான், முதலில் சரளமாக பொய் சொல்ல கற்று கொள்ளுங்கள்.
முதலில் டிவி சரி செய்ய கிளம்புமுன் டிவிக்காரரின் முகத்தை பாருங்கள் காசு தருவாரா என்று, அதை விட எவ்வளவு தருவார் என்பதையும் கவனியுங்கள் அப்போழுதுதான் எவ்வளவு நேரம் டிவியை சரி செய்ய வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியும்.
டிவியை பிரித்தவுடன் உள்ளே இருக்கும் பாம்பு பல்லி பூரான் தேள் போன்றவற்றை விரட்டியடியுங்கள், பிறகு ஒரு துடைப்பத்தை கொண்டு ஒட்டடைகளை கிளின் செய்யுங்கள்.இதை செய்தாலே பெரும்பாலான டிவிக்கள் சரியாகிவிடும்.
பின் கண்ணை மூடிகொண்டு எதாவது ஒரு பொருள் மீது கையை வையுங்கள் அதை கழற்றி மாட்டுங்கள் டிவி ரெடியாகவில்லையா அதேபோல பத்து முறை செய்யுங்கள்
அப்பவும் ரெடியாகவில்லையா../? டிவிக்காரரை ஒரு காஃபியோ டீயோ வாங்க வெளியே அனுப்பி வையுங்கள்.
இப்போழுது ஒரு சுத்தியலை எடுத்து டிவியின் நான்கு புறமும் ஓங்கி அடிக்கவும், இப்போழுது டிவியை போட்டால் கண்டிப்பாக ஓடும்.
இப்படித்தான் எங்க ஊரில் நான் ஒரு பெரிய டிவி மெக்கானிக் ஆனேன்
நாளைக்கு கம்பூட்டர் சரிசெய்ய சொல்லி தரேன் ஒகே.
Saturday, May 16, 2015
டிவி மெக்கானிக் ஆவது எப்படி.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment