Sunday, May 10, 2015

ஓஷோ ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும் -
ஒரு பாதிரியாரும் கன்னியாஸ்த்திரியும் தங்களது மதத்தை அடுத்த நாட்டிலும் பரப்பும் நோக்கோடு ஒரு ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டனர், அவர்கள் பாலைவனதின் வழியாக நெடும் தூரம் செல்லவேண்டியிருந்தது, பயனம் மிக கடுமையாக இருந்தது, வழியில் பாலைவனப்புயல், அதனால் பயணம் நீண்டுகொண்டே சென்றது... அவர்கள் பயணித்த ஒட்டகமும் மயங்கி விழுந்து மடிந்தது.
அவர்களிடம் இப்போது போதுமான உணவும் இருக்கவில்லை, அந்த பாதிரியாரால் பசியை பொருக்கமுடியவில்லை, இறப்பு சிறிது சிறிதாக அவருக்கு ஏற்ப்பட்டு கொண்டிருந்தது.
கன்னியாஸ்த்திரி அவரது இறப்பை இனி தடுக்கமுடியாது என்பதை உணர்ந்தார், எனவே அவரை நோக்கி “பாதர்! உங்களுக்கு ஏதாவது நிறைவேராத ஆசை ஏதேனும் உள்ளதா? “ எனக் கேட்டார்
பாதர், “ஆம், நான் இதுவரை நிர்வாணமாக எந்த பெண்னையும் பார்த்ததில்லை; அது தான் எனது ஆசையாக இருக்கிறது “ என்று கூறினார்.
கன்னியாஸ்த்திரி உடனே “பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு! சாக கிடக்கும் இந்த மனிதனின் ஆசையை நிறைவேற்றவே நான் எனது உடைகளை அவிழ்க்கிறேன் “ என்று கூறிவிட்டு கன்னியாஸ்த்திரி துணிகளை அவிழ்த்து நிர்வாணமானார்.
பாதர், “Thank you sister! உங்களுக்கு நான் ஏதாவது செய்ய முடிந்தால் செய்கிறேன் என்னவேண்டுமோ கேலுங்கள்” என்றார்.
கன்னியாஸ்த்திரி, “ம். ம்ம்.. ஒன்னுமில்லை, நானும் இதுவரை எந்த ஆணையும் அப்படிப் பார்த்ததில்லை“ என்றார்.
பாதர், “அப்படியே ஆகட்டும்” எனச்சொல்லிவிட்டு வழக்கம் போல் “ பரலோகத்திலிருக்கும் ஏசுவே என்னை மன்னித்துவிடு!” என்று கூறிவிட்டு அவரும் துணிகளை கலைந்தார்.
ஓஷோ :
மனிதனிடம் எதை அடக்கி வைக்கப்படுகிறதோ அது பன்மடங்கு வெளிப்படும் .

No comments:

Post a Comment