Wednesday, March 23, 2016

பொதுமக்களுக்கு போட்டோகாரனின் வேண்டுகோள்

பொதுமக்களுக்கு போட்டோகாரனின் வேண்டுகோள்
...................................................................................................

ஒரு நாட்டிய அரங்கேற்றம் செல்லுகிறீர் .. அப்போது உங்களுக்கும் ஆட தெரியும்
என்ற எண்ணம் வந்ததும் அப்படியே எழுந்து ஆடுவீர்களா...?

உங்களுக்கு அறுசுவை சமையல் தெரியும் ஆகையால்
ஒரு திருமண நிகழ்ச்சியில் சமையல்காரர்கள் இருக்க நீங்கள் உங்கள் அடுப்பு பற்றவைத்து அங்கேயே சமைத்து பரிமாறி பெருமை பெற்றுக்கொள்வீர்களா...?

இவை எவ்வளவு அநாகரீகம்...
குற்ற உணர்வு கொள்வீர்கள்...

ஆனால் திருமணங்களில்  பணி நிமித்தமாக நிர்ணயிக்கப்பட்ட
போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கும் பொழுது

நீங்கள் பொழுது போக்கிற்காக வாங்கி வைத்துள்ள கேமராவை
மேடையில் ஏறி அங்கும் இங்கும் போட்டோ எடுத்து என்ன செய்கிறீர்கள்..?

நீங்கள் விலைஉயர்ந்த கேமரா வைத்திருப்பது ஊருக்கே தெரிய வேண்டுமா...

அப்படி நீங்கள் எடுக்கும் போட்டோக்களை பிரிண்ட் போட்டு மணமக்களுக்கு தந்ததுண்டா...இல்லை..

இவை அநாகரீகம் என்று உங்களுக்கு ஏன் உறைக்கவில்லை...

மணமக்களுக்கு எங்களை விட உங்களை அதிகம் தெரிந்திருப்பதால்
அவர்கள் உங்களுக்கு பிறகு தான் எங்களுக்கு ஒத்துழைப்பு தருகின்ற ஒரு
தர்ம சங்கடத்தை ஏன் ஏற்படுத்துகிறீர்...

நீங்கள் வாங்கிய கேமராவை எடுத்து பழக வேண்டுமெனில் உங்கள் வீட்டில் உள்ளவரை போட்டோ எடுங்கள்..உங்கள் வீட்டு விசேசத்தில் போட்டோகிராபர் வைக்காமல் நீங்களே எடுத்து கொள்ளுங்கள்...

ஏன் எங்கள் உழைப்பை பிழைப்பை கொல்லுகிறீர்கள்..

இந்த இழி செயலை இளைஞர்களை விட மூத்தவர்களே  அதிகமாக
செய்கின்றனர் என்பது நிதர்சனமான வேதனை .

புரிந்து கொள்ளுங்கள் புகைப்படமும் எங்கள் தொழில் தான்...

போட்டோகிராபர்கள் கலைஞர்கள்...கைக்கூலிகள் அல்ல...

ஒரு கவிஞன் சொன்னான் ...

சுத்தக்கலைஞன்
சுய மரியாதைக்காரன்
தான் நிராகரிக்கப் படுகிறோம்
என்றால்
தன்னை தானே
துடைத்து கொள்வதில்லை
தனக்குள் தன்னை
உடைத்து கொள்கிறான்...

I am a
Cameraman