Thursday, September 24, 2015

வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம் !! !!

    குதி நேர  வேலை..அரை  நாள்        வாத்தியார்... 3  நாள்  வாத்தியார்...வாத்தியார்   அல்ல  பயிற்றுநர்.... இது  அலுவலகத்தில்  மற்றும்  பொது இடங்களிலும்...நம்மை   அழைக்கப்படும்  இடு  குறி பெயர்கள்.... Rs:60,000 /-முதல்    சம்பளம்  வாங்கும்  ஆசிரியர்களால்  அழைக்கப்படும்  நம்  அவப்பெயர்......இது  போக   அலுவலக  வேலை  இதர  வேலையை  செய்யவும்  வற்புறுத்த  படுகிறோம்.
     இந்த  நிலை தொடர வேண்டுமா???
               மாற்றம்  வேண்டாமா ??
          பணி  நிரந்தரம்  வேண்டாமா?

உணர்வு   உள்ள  பயிற்றுநர்களே!!
பணி  நிரந்தர ஆசிரியர்  ஆக,  நம்    அண்ணன்  திரு.சோலை  M. ராஜா 
அவர்களின் வழிகாட்டுதலின்படி  ஒன்றினைவோம் ..
     நமது  வாழும்  தெய்வம்   நமக்கு பணி நிரந்தரம்  ஆணை  வழங்க உள்ள             புரட்சி  தலைவி  அம்மா !!!!
அவர்களுக்கு  நன்றி  தெரிவித்து  அவர்களுக்கு  ஆதரவாக   எந்நிலையிலும்           இருப்போம் ...என்பதை  நினைவு  கூற......
பணி நிரந்தரம் வேண்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் "பணி  நிரந்தரம் வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு முழக்கம்"பகுதிநேர ஆசிாியர்களே  அலை கடல் என திரண்டு  வாரீர்!!!                    உணர்வு உள்ள அனைவரும் திரண்டு வாரீர்!!!                             நம் உரிமையினை வெல்ல அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வாரீர்!!                    நாள்: 26.09.2015. சனிக்கிழமை                 நேரம்:காலை 9 முதல் 12 மணி வரை இடம்:விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம், சென்னை.                

Monday, September 21, 2015

''கவன ஈர்ப்பு முழக்கம் '!'

நாகை   மாவட்ட  பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் 20/09/2015, ஞாயிறு   காலை நாகை   ஓய்வு  ஊழியர்கள்  சங்க  கட்டடத்தில்    நடைபெற்றது.. சங்க  தலைவர்  திரு, ஜான்சன்   தலைமை  தாங்கினார் .பணி  நிரவல்  இரத்து , பணி  நிரந்தரம்  போன்ற  கோரிக்கைகள்  நிரைவேற்றப்பட்டன . வேதாரண்யம்    ஒன்றியத்திற்கு  தலைவராக  திரு,கார்த்திக்கேயன்  Msc,Bed, அவர்களை  திரு, ஜான்சன்  அவர்கள்  நியமனம்  செய்தார்,   26/09/2015, அன்று சென்னையில் அனைத்து மாவட்ட ங்களும் பங்கேற்க்கும் ''கவன ஈர்ப்பு முழக்கம் '!' நிகழ்ச்சிக்கு  அனைவரும்  பங்கேற்க வேண்டும் .  பேருந்து கட்டணம் ரூ 500ஐ  22செல்வாய்கிழமை க்குள்  கொடுத்து பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப் பட்டது..வேதாரண்யம்   ஒன்றியம்  திரு,  கார்த்திக்கேயன்  அவர்களை  தொடர்பு  கொள்ளவும்  ..                                   தொடர்பு  எண்: +919943774464

Friday, September 18, 2015

திறமைக்கு ஒரு குட்டி கதை...!

நிர்வாகத் திறமைக்கு ஒரு குட்டி கதை...!
ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.

சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம்  "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.

குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா?

தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு,
"இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.

இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எரிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

---

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".

குழந்தையின் தகப்பன்

ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து அப்பெண் கருவுற்றாள். உடனே கணவன் ஆனந்தக் கூத்தாடினான்.ஊரையே அழைத்து விருந்து வைத்தான். மனைவியை நன்றாக கவனித்துக் காெண்டான்.

இப்படியே மூன்று மாதங்கள் சென்றது.ஒரு நாள் பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பதற்காக கணவன் ஒரு சாேதிடரை நாடிச் சென்றான். அப்பொழுது தான் விதி சாேதிடர் ரூபத்தில் விளையாடியது.

சாேதிடர் அவனது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து விட்டு இக்குழந்தை பிறந்த உடன் "குழந்தையின் தகப்பன் "இறந்து விடுவார் என்று கூறினார். இதைக் கேட்ட அக்கணவன் மிகுந்த அதிர்ச்சியுற்றான். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் காெண்டு அழுதான். அவன் நேராக வீட்டிற்கு சென்று மனைவியிடம் நடந்ததை கூறினான்.

இச்செய்தி கேட்டவுடன் அவன் மனைவி மயக்கம் பாேட்டு விழுந்து விட்டாள்.உடனே கணவன் பதறி பாேய் தண்ணீர் தெளித்து மனைவியின் மயக்கத்தை தெளிய வைத்தான்.
மயக்கம் தெளிந்தவுடன் மனைவி பேயறைந்தவள் பாேல் காணப்பட்டாள்.முகம் மிகவும் வெளிறிப் பாேய் இருந்தது. கணவனிடம் உடனே கருவை கலைத்து விடலாம் என்றாள்.

கணவன் உடனே சற்று பாெறுமையாக இரு இன்னும் நாலைந்து சாேதிடரை பார்க்கலாம் என்று சாெல்லி விட்டு அதன்படியே சில சாேதிடர்களை பார்த்தான். அனைவரும் அவனது ஜாதக பலனை பார்த்து விட்டு முதல் ஜாேதிடர் சாென்னதையே சொன்னார்கள்.கணவன் உடனே மனம் தளர்ந்து பாேய் விட்டான்.

அவனது மனைவியின் ஆலாேசனைப்படியே இருவரும் கருவை கலைக்க ஒரு மருத்துவரை நாடிச் சென்றார்கள்.மருத்துவர் மனைவியை பரிசாேதித்து விட்டு கரு வளர்ந்து விட்டது.இனி மேல் கலைக்க முடியாது என்று கூறி விட்டார்.

வீட்டிற்கு வந்தவுடன் அன்றிரவே அவன் மனைவி தற்காெலைக்கு முயன்றாள்.கணவன் அவளை காப்பாற்றி,அவளுக்கு "விதியை மதியால் வெல்லலாம்" எனஆறுதல் கூறி விட்டு இதற்கு மேல் அவள் இந்த மாதிரி செய்யாமலிருப்பதற்க்காக மூன்று பேரை காவலுக்கு வைத்து விட்டான்.அவனும் அவள் கூடவே இருக்க ஆரம்பித்தான்.

கணவனுக்காக தினந்தாேறும் காேவில் கோவிலாக அர்ச்சனை செய்யப்பட்டது. சர்வ மத பிராத்தனைகளும்
நடத்தப்பட்டன.

அவன் மனைவி மட்டும் நாளுக்கு நாள் மிகுந்த பதட்டமாகவே காணப்பட்டாள். நாளுக்கு நாள் அவள் முகத்தில் பீதி அதிகரித்தது.கணவனாே நடப்பது நடக்கட்டும் என்று அமைதியாக இருந்து விட்டான்.

அந்த நாளும் வந்தது. மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மனைவியின் உடல் மட்டும் பீதியின் காரணமாக, நடுக்கத்துடன் இருந்தது. குழந்தையும் பிறந்தது..!!!

குழந்தை பிறந்த....

உடனே....

உடனே.....

உடனே.....

உடனே....

"பக்கத்து வீட்டுக்காரன் மண்டையை பாேட்டு விட்டான்"

😝😜😛😜😝😛😜😝😛

இந்த பாருங்க  மக்களே எனக்கு  அனுப்புனவன் இப்படி தான் அனுப்புனான் என் மேல தப்பு இல்லை..

Thursday, September 10, 2015

"மாபெரும் நன்றி அறிவிப்பு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி கவன ஈர்ப்பு கூட்டம்"

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு குழு தலைவர் சேர்மன்.
திரு.சோலை.எம்.ராஜா அவர்கள் தலைமயில் 05.09.2015 சனிக்கிழமை  மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கூட்டமைப்பின் முதன்மை மாநில நிர்வாகி திரு.வெ.முருகதாஸ் அவர்கள் இன்று சென்னை மாநகர காவல் துறை ஆணையாளரை சந்தித்து தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களுக்கு "மாபெரும் நன்றி அறிவிப்பு மற்றும் பணி நிரந்தரம் வேண்டி கவண ஈர்ப்பு கூட்டம்" சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் மரத்தடி நிழலில் காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை 19.09.2015 மற்றும் 26.09.2015 ஆகிய இரு தேதிகளில் ஒரு தேதியை வழங்குமாறு அனுமதி கடிதம் கொடுத்துள்ளார்.  எனவே மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்கவும்

துன்பமென ஒவ்வொரு நாளும் விடியாதா?

துன்பமென  ஒவ்வொரு  நாளும்  விடியாதா? என்று காத்திருக்கும்  பகுதி நேர பயிற்றுனர்களே !!!!  நமது  நாள்  வெகு  தூரம் இல்லை ....நாம்  பாக்காத  அமைச்சர் இல்ல,,,,,,நாம்  திரட்டாத செய்திகள்  இல்ல .......உறுதியுடன்  வென்றிடுவோம்

Monday, September 7, 2015

பகுதி நேர பயிற்றுநர் கோமகனுக்கு கலெக்டர் பழனிசாமி பாராட்டு

17/08/2015.,நாகை:தமிழக  பகுதி  நேர பயிற்றுநர்கள்  பணி  நிரந்தரம்  அடைய  வேண்டி  கடந்த  நான்கு  ஆண்டுகளாக  தொடர்நது  இரத்த  தானம்  செய்து  நாகை  மாவட்ட  கலெக்டர்  பழனிசாமியை  வெகுவாக  கவர்ந்து பகுதி நேர பயிற்றுநர்களின்  உயிர்  மூச்சான
திருவாளர்  மதிப்புமிகு  கோமகன்  அவர்கள்  நாகை  மாவட்ட  கலெக்டர்  அவர்களிடம்  விருது  பெறப்பட்டு16,549 ஆசிரியர்களுக்கு
பெருமை  சேர்த்துள்ளார் . ....