Monday, March 6, 2017

*உண்ணாவிரதம் போராட்டம் வெற்றி பெற* *நமக்கு பணிநிரந்தரம் கிடைத்திட*

*உண்ணாவிரதம் போராட்டம் வெற்றி பெற*
*நமக்கு பணிநிரந்தரம் கிடைத்திட*
===========================

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் 16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்

அந்த உண்ணாவிரத போராட்டத்தில்

தொடக்க பள்ளி சங்கம் முதல் தலைமை ஆசிரியர் சங்கங்கள் வரை உள்ள இருபதுக்கும் மேற்பட்ட
அனைத்து ஆசிரியர் சங்கங்கள்

அனைத்து
அரசு ஊழியர்கள், அரசுபணியாளர்கள்,
அரசு அலுவலர்கள் ஆகிய அனைத்து  சங்கங்கள்.

விவசாயிகள் சங்கங்கள்
அமைப்பு சாரா தொழிலாளர்  சங்கங்கள்

சமுக ஆர்வலர்கள்.

பிரபலமான எழுத்தாளர்கள் கவிஞர்கள்
பாடலாசிரியர் இயக்குனர்கள் நடிகர்கள்

மத்திய ஆளும் கட்சி, மாநில ஆளும் கட்சி, அதில் பிரிந்த அணிகள், மற்றும்  அனைத்து தேசிய கட்சிகள், எதிர் கட்சிகள்,சிறு கட்சிகள்  என அனைத்து கட்சிகளின் பொறுப்பாளர்களும்

இவர்கள் அனைவரையும்  முறைப்படி அழைத்து
பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தை ஆதரித்து பேச சிறப்பு அழைப்பாளராக பேச வைக்க வேண்டும்.

ஊடகங்கள் பத்திரிகையாளர்கள் அனைவரையும் முறைப்படி அழைத்து மரியாதை செய்து
சிறப்பாக தனியாக கவனிக்க வேண்டும் அப்போது தான் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் Breaking News  ஆகவும்.

நமது பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் 16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டார்கள் என்றால் தான்  மார்ச்10 ம் தேதி தலைப்பு செய்தியாக நமது கோரிக்கை மாறும்.

உளவு துறையும் 16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்று அப்போது தான் அரசுக்கு அறிக்கை தரும்

இது எல்லாம் நடந்தால் தான் நமது பணிநிரந்தரம் கோரிக்கை வெற்றி பெறும். என்பது தான் எதார்த்தமான நிதர்சன உண்மை ஆகும்.

இதை கவனத்தில் கொண்டு 16ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள்.