தமிழக அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் நியமனத்தில், கலப்பு திருமணம் புரிந்தோர் பிரிவினர், 133 பேருக்கான கவுன்சிலிங்கிற்கு, தடை கோரியது தொடர்பான வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் நியமனத்தில், கலப்பு திருமணம் புரிந்தோர் பிரிவினர், 133 பேருக்கான கவுன்சிலிங்கிற்கு, தடை கோரியது தொடர்பான வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு முன், கணினி ஆசிரியராக
நியமிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிறப்பு தேர்வு நடந்தது. இதில், மொத்தம் உள்ள, 792 பேரில், 134 பேர் மட்டும் தேர்ச்சிபெற்றனர். இந்நிலையில், மீதமுள்ள 652 இடங்களுக்கு, தமிழக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான நடவடிக்கையை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., கடந்தஆண்டு நவ., மாதம் மேற்கொண்டது. இதில், சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்குப் பின் தேர்வு செய்யப்பட்ட, 652 பேருக்கு, கடந்த ஏப்., 4ம் தேதி, கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நியமனத்தில், சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவில், குளறுபடிகள் நடந்துள்ளதாக, ஒரு தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவு பெற்றனர்.இதைத் தொடர்ந்து, மொத்தம் உள்ள, 652 இடங்களில், 490 இடங்களை மட்டும், கவுன்சிலிங் மூலம் நிரப்ப, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது. கலப்பு திருமணம் செய்தவர்கள், விதவைகள், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர் பிரிவிற்கான, 133 இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது, இரண்டு மாதங்கள் ஆன நிலையில், இந்த இடங்களை நிரப்ப, கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வி துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், தேர்வான, 133 பேரும், சிறப்பு ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக வழக்கு தொடர்ந்தவர்களும், பணி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக, பள்ளி கல்வி துறையில் இருந்து, இதுவரை, தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதுகுறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:கவுன்சிலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 133 இடங்களுக்கு மீண்டும், கவுன்சிலிங் நடத்த, நீதிமன்றத்தில் இருந்து, உத்தரவு வரவில்லை. இந்த வழக்கு, இன்னும் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில், நாளை வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, முடிவுகள் தெரியும். இவ்வாறு, அவர் கூறினார்.
Tuesday, June 16, 2015
தமிழக அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் நியமனத்தில், கலப்பு திருமணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment