ஹெல்மெட்டு!
அணிந்தவர்
மீது
மோதினால்
உடையும்
எமனின்
பல்செட்டு!
அரசாங்கத்தின்
சொல் கேட்டு
அதனை
அணியலாமே!
அதைவிட்டு
போகலாமோ
உயிர் விட்டு?
சாவின் மெட்டு
காதுக்குள்
கேட்காமல்
போடும் பூட்டு
ஹெல்மெட்டு!
வீட்டில்
காத்திருக்கிறாள்
அழகிய சிட்டு!
அவளை
அழ விட்டு
நீ
ரோட்டில்
சிந்தலாமோ
ரத்தச் சொட்டு!
அணிந்திடுவாய்
ஹெல்மெட்டு!
அப்புறம்
எமனும்
ஆகிடுவான்
உன்
கிளாஸ் மேட்டு!
No comments:
Post a Comment