Wednesday, June 3, 2015

படித்ததில் பிடித்தது

இருபத்து மூன்று முறை தன் கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன்"-(மகனின் வருத்தம்)
ஒரு வீட்டில் ஜன்னல் அருகே தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர். சற்றுத் தொலைவில் ஒரு காகம் வந்தமர்ந்தது.
‘அது என்ன மகனே?’ என்று கேட்டார் தந்தை.
‘அப்பா, அது காகம்’ என்றான் மகன்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.
‘அது காகம்’ என்றான் மகன்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மீண்டும் தந்தை ‘அது என்ன?’ என்றார்.
மகனுக்கு கொஞ்சம் எரிச்சல். ‘காகம்!’ என்றான்.
நான்காவது முறையாக மீண்டும் தந்தை மகனிடம் `அது என்ன மகனே?’ என்று கேட்டார்.
மகனின் கோபம் எல்லை கடந்தது. ‘காகம்… காகம்… காகம்… வயசாச்சுன்னா சும்மா இருக்க வேண்டியதுதானே’ என்று கோபத்தில் எரிந்து விழுந்தான்.
தந்தையின் கண்கள் பனித்தன. எதுவும் பேசவில்லை.
மெதுவாக எழுந்து உள்ளே போனார். ஒரு பழைய டைரியை எடுத்து வந்தார். அதில் ஒரு பக்கத்தைப் புரட்டி மகனிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.
‘இன்று என் செல்ல மகன் என்னிடம் ஜன்னலில் வந்தமர்ந்த ஒரு பறவையைக் காட்டி அது என்ன? என்று கேட்டான்.
காகம் என்று புன்னகையுடன் சொன்னேன்.
அவனுக்குப் புரியவில்லை போல! மீண்டும் மீண்டுமாய் இருபத்து மூன்று முறை என்னிடம் அது என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தான். நான் ஒவ்வொரு முறையும் அவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்துக் கொண்டே அது காகம் என்று சொன்னேன்.
இன்று நான் ரொம்ப மகிழ்ச்சியாக உணர்ந்தேன்’ என்று எழுதி யிருந்தது.
மகனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. இருபத்து மூன்று முறை தன் கேள்விக்கு அன்புடன் பதில் சொன்ன தந்தையையா நான்காவது முறை கோபத்தில் திட்டினேன் என மனம் வருந்தி தந்தையின் கரம் பிடித்தான்.
Varagooran Narayanan's photo.Like · Comடித்ததில் பிடித்தது 

No comments:

Post a Comment