பொய் விளம்பரங்களும் மக்களின் Mind Voiceம்:
எர்வாமேடின்: அமேசான் காடுகளில் விளையும் அரிய வகை மூலிகைகளால் பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது!
மக்கள்: அரிய மூலிகைகளா! எங்க மூலிகை பேர சொல்லுங்க பாப்போங்!
சென்னை அமிர்தா: சென்னை அமிர்தா'ல படிச்சா, படிக்கும் போதே part timeமா 10,000 வரைக்கும் சம்பாதிக்கலாம்.
மக்கள்: காலேஜ்ல வேலை பாக்குற ஆள்களுக்கே 3மாசம் சம்பள பாக்கினு கேள்வி பட்டேன்.
மவுண்டன் ட்யுவ்: குறிஞ்சுப் பூவுக்காக 16வருஷம் காத்திருக்க போறியா!
மக்கள்: கொய்யால டேய், 10ஓவா குடுத்தா குடுக்க போறாய்ங்கெ! ஏன்டா ஏங்!
விம் பார்: முழுசா 20 எழுமிச்சைகளின் சக்தி அடங்கிய விம் பார்.
மக்கள்: ஏன்டா டேய், ஒரு எழுமிச்சம்பழம் எவ்ளோனு தெரியுமா! 10ரூவா விம் பார்'கு ஏன்டா வண்டி வண்டியா புளுகுறீங்க!
கோல்கேட்: ஒங்க டூத் பேஸ்ட்'ல உப்பு இருக்கா!
மக்கள்: கையில பிஞ்ச செருப்புதாங் இருக்கு!
டேபிள் மேட்: பக்கத்து வீட்ல இருக்கு, ஏத்த வீட்ல இருக்கு, மேல் வீட்ல இருக்கு, ஹ்ஏ ஒங்க வீட்ல இருக்கா!
மக்கள்: எங்க வீட்ல அழுக்கு மூட்டை இருக்கு, கிழிஞ்ச பாய் இருக்கு, ஓட்ட டவுசர் இருக்கு ஒங்க வீட்ல இருக்கா! வயித்தெரிச்சல கெளம்பாம மரியாத ஓடிரு!
பஜாஜ் டிஸ்கவர்: இது ஓடாது பறக்கும்...
மக்கள்: Freeயா தருவாங்களா பாஸ்!
5ஸ்டார்: யூசுப் பாய், அப்பாவோட பேன்ட்ட ஒரு ஜான் கம்மி பண்ணுங்க!
மக்கள்: யூசுப் பாய் அவிங்கெ செவுல சேத்து ஒன்னு குடுங்க!
3Roses டீ தூள்: சாவிய மறந்து வச்சுட்டீங்களா! வாங்க வந்து எங்க வீட்ல வெய்ட் பண்ணுங்க...
மக்கள்: ஏங்... எங்க வூட்டு சாவிய நீங்கதாங் எடுத்தீங்களா!
கோல்டு வின்னர்: இப்போ என்னோட லைஃப் பார்ட்னர் ஒங்களோட லைஃப் பார்ட்னர் ஆக முடியும், எப்டி கேக்றீங்களா!
மக்கள்: ஏங் ஓ புருஷன் கேரக்டர் சரியில்லயா!
கல்யாண் ஜுவல்லர்ஸ்: கல்யாண்'ல சேதாரத்த இப்ப அடிச்சு ஒடச்சு நொறுக்கிட்டாங்கல...
மக்கள்: இப்டியே நீ பேசிட்டு இரு, ஒரு நாள் கடையதாங் அடிச்சு ஒடச்சு நொறுக்க போறய்ங்கெ
No comments:
Post a Comment