Tuesday, February 2, 2016

திருநெல்வேலி பொக்கிஷம்

திறமையால் இந்திய பிரதமரின் வாழ்த்தை பெற்ற நம் திருநெல்வேலி பொக்கிஷம்
#நம்_வீட்டு_குழந்தையென_நினைத்தால்_பாராட்டி_அதிகம்_பகிருங்கள்

11வயதில், தனக்குரிய இணையதளத்தைத் தானே வடிவமைத்தவர்-
அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.

இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.

தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,
ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.
ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.

HCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11. TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.

Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர Documentry
படத்தை ஒளிபரப்பியது.

நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின்
74 மொழிகளில் 174 நாடுகளில் விசாலினியின் அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்திய போது விசாலினிக்கு
வயது 13 தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது ஒரு Phone Call. Our Prime Minister Mr. Modi
wants to meet your Daughter Visalini என்று. பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று
தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம்
என்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார்
என்று பெருமை பொங்க வாழ்த்தினார். உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.

உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.

நண்பர்களே, விசாலினி என்னும் விருட்சத்தின் சாதனைகளை முடிந்தவரை அனைவரும் Facebook, Whatsapp ல் Share செய்யுங்கள். இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்----சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)

Monday, December 21, 2015

சிறுநீரகக்கல்லா..?

எதை எதையோ share பண்ணறீங்க இதை தயவு செய்து பகிருங்கள்....!!!
யாரோ ஒருவருக்கு பயன்படும்...!!!
சிறுநீரகக் கல்...!!!
இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!
இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

Wednesday, October 28, 2015

  இன்றைய  பகுதிநேர  பயிற்றுநர்களின்  மனநிலை

       இன்றைய  பகுதிநேர  பயிற்றுநர்களின்  மனநிலை , 
          நாம்  பணியமர்ந்து,  நான்கு  ஆண்டுகள்    ஆகின்ற நிலையில்  இன்னும்  பணி  நிரந்தரம்   இல்லை   எத்தனை  முறை  முயன்றும்  பலனில்லை ,  என்ற   ஏக்கத்துடன் ,  எதிர்பார்ப்புடனும் ,  நாளும்  நாட்களை  எண்ணியபடி  விரக்தியடைந்த  நிலையில்  உள்ளனர் .
        ஆனால் ,  நமக்கெல்லாம்  ஒரு  விஷயம் ,  நினைவில்  கொள்ள வேண்டும் . 
           கிட்டத்தட்ட  முப்பது  ஆண்டுகளாக   ஏன்   ,  கடந்த   ஆட்சியில்  கூட  நம்மை  பற்றி  நினைத்துப்  பார்க்க   ஆளில்லை . . 
            இந்த  பொற்கால ஆட்சியில்   நம்மையும்   ஆசிரியர்களாக்கி  அழகு  பார்க்கின்றனர் . .
             ஆனால்  நம்மில்  சிலர்  பணிநிரந்தரத்தை  எண்ணி  கவலை  கொள்கின்றனர் , 
              ஆசிரியர்ப் பணிக்காக  இலட்சக்கணக்கில்  பணம்  செலவழிக்க  காத்திருக்க . ......நாம்  ......
              இவ்வேலை  இல்லாமல் ,   இருந்தால்  நாம்   என்னவாயிருப்போம்.. யோசித்து  பார்ப்போமா.......
               தனியார்  நிறுவனத்தில்  பணியாற்றி  வரும்  நம்  ஆசிரியர்  நிலைகளை  நம்  ஆசிரியர்களையே விசாரித்தால் நிலை   புரியும் . ..
               இனி  யாரும்  வருத்தப்பட  வேண்டிய  நிலை   இல்லை . .
             விரைவில்  நமக்கான  ஆணை  வரவிருக்கிறது . ....
              மரத்தை  நட்டவர்கள்  தண்ணீர்  விடாமலா... போவார்களா.....!!!!!!!
             நாம்  வாடினால்  முதலில்  வருத்தம்   அடைவது   அவர்களாகத்தான்...இருக்க  முடியும் . ....
என்பதை  மறவாதீர் . ......
      

Tuesday, October 20, 2015

Deepavali gift...

My Advance  Deepavali gift...   

Open the link and touch anywhere on the screen✨

http://goo.gl/2UoUaw

Worth reading: Deep Meaning

Worth reading: Deep Meaning

You were born in a first class hospital, I was delivered at home, we both survived.

You went to a private primary school and I went to a public school, we both ended in the same high school.

You woke up from the bed and I woke from the floor, we both had a peaceful night rest.

Your outfits are all expensive, mine are all simple and cheap, we both still cover our nakedness.

You ate fried rice and roasted chicken, I ate local made food but we both still ate to our satisfaction.

You ride on Lexus jeep, Range Rover, G Wagon, Hummer Jeep and I use public transport but we still got to our various destination.

You may be reading this post from your Sony xperia, BB Z10, Q10, Samsung Galaxy 6edge, IPhone6+ and I typed it with my Touch one broken screen, we still see the message.

Lifestyle is not a competition and there are different ways to get a lot of things done, different lanes all leading to the same destination. Just because your neighbour is doing things faster does not mean you are failing.

Happiness doesn't come from having everything, but making the best out of what you have, it's all about how you see yourself.

Happiness is not having what you like. Happiness is liking what you have and being content...

Thursday, September 24, 2015

வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம் !! !!

    பகுதி நேர  வேலை..அரை  நாள்        வாத்தியார்... 3  நாள்  வாத்தியார்...வாத்தியார்   அல்ல  பயிற்றுநர்.... இது  அலுவலகத்தில்  மற்றும்  பொது இடங்களிலும்...நம்மை   அழைக்கப்படும்  இடு  குறி பெயர்கள்.... Rs:60,000 /-முதல்    சம்பளம்  வாங்கும்  ஆசிரியர்களால்  அழைக்கப்படும்  நம்  அவப்பெயர்......இது  போக   அலுவலக  வேலை  இதர  வேலையை  செய்யவும்  வற்புறுத்த  படுகிறோம்.
     இந்த  நிலை தொடர வேண்டுமா???
               மாற்றம்  வேண்டாமா ??
          பணி  நிரந்தரம்  வேண்டாமா?

உணர்வு   உள்ள  பயிற்றுநர்களே!!
பணி  நிரந்தர ஆசிரியர்  ஆக,  நம்    அண்ணன்  திரு.சோலை  M. ராஜா 
அவர்களின் வழிகாட்டுதலின்படி  ஒன்றினைவோம் ..
     நமது  வாழும்  தெய்வம்   நமக்கு பணி நிரந்தரம்  ஆணை  வழங்க உள்ள             புரட்சி  தலைவி  அம்மா !!!!
அவர்களுக்கு  நன்றி  தெரிவித்து  அவர்களுக்கு  ஆதரவாக   எந்நிலையிலும்           இருப்போம் ...என்பதை  நினைவு  கூற......
பணி நிரந்தரம் வேண்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கலந்து கொண்டு  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் "பணி  நிரந்தரம் வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு முழக்கம்"பகுதிநேர ஆசிாியர்களே  அலை கடல் என திரண்டு  வாரீர்!!!                    உணர்வு உள்ள அனைவரும் திரண்டு வாரீர்!!!                             நம் உரிமையினை வெல்ல அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வாரீர்!!                    நாள்: 26.09.2015. சனிக்கிழமை                 நேரம்:காலை 9 முதல் 12 மணி வரை இடம்:விருந்தினர் மாளிகை அருகில், சேப்பாக்கம், சென்னை.                

Monday, September 21, 2015

''கவன ஈர்ப்பு முழக்கம் '!'

நாகை   மாவட்ட  பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் 20/09/2015, ஞாயிறு   காலை நாகை   ஓய்வு  ஊழியர்கள்  சங்க  கட்டடத்தில்    நடைபெற்றது.. சங்க  தலைவர்  திரு, ஜான்சன்   தலைமை  தாங்கினார் .பணி  நிரவல்  இரத்து , பணி  நிரந்தரம்  போன்ற  கோரிக்கைகள்  நிரைவேற்றப்பட்டன . வேதாரண்யம்    ஒன்றியத்திற்கு  தலைவராக  திரு,கார்த்திக்கேயன்  Msc,Bed, அவர்களை  திரு, ஜான்சன்  அவர்கள்  நியமனம்  செய்தார்,   26/09/2015, அன்று சென்னையில் அனைத்து மாவட்ட ங்களும் பங்கேற்க்கும் ''கவன ஈர்ப்பு முழக்கம் '!' நிகழ்ச்சிக்கு  அனைவரும்  பங்கேற்க வேண்டும் .  பேருந்து கட்டணம் ரூ 500ஐ  22செல்வாய்கிழமை க்குள்  கொடுத்து பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப் பட்டது..வேதாரண்யம்   ஒன்றியம்  திரு,  கார்த்திக்கேயன்  அவர்களை  தொடர்பு  கொள்ளவும்  ..                                   தொடர்பு  எண்: +919943774464