'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு
வீட்டில் ஓய்வில் இருந்த அவரது செல்போன் சிணுங்கியது. 'ஹலோ' என்பதற்குள், எதிர்முனையில் கொஞ்சலான பெண் குரல் 'டேய் சிவா நான் பிரியா பேசுறேன். வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' என்றது. 'என் பெயர் சிவா இல்லேங்க.. ராங்கால்..!' என்றபடி அவர் போனை ஆப் செய்தார்.
அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது 62. மனைவி இறந்துவிட்டார். திருமணமான மகளோடு, அவளது வீட்டிலேயே வசிக்கிறார். வீடு நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கிறது. மகளும், மருமகனும் வேலைக்கு சென்றுவிட்ட பின்பு, அந்த பெரிய வீட்டில் ஒரு காவல்காரரைப் போல் படுத்தே கிடப்பார். மகளுக்கு குழந்தையும் இல்லை.
மதியம் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் தூங்கலாம் என்று அவர் படுத்தபோது மீண்டும் செல்போன் ஒலித்தது. காலையில் பேசிய அதே எண்ணில் இருந்து அழைப்பு. போனை ஆன் செய்து பேசினார். எதிர்முனையில் அந்த பெண்ணே பேசினாள்.
'என்னங்க நீங்க..! அழகான பெண் ஒருத்தி போன் செய்து, எப்போ வீட்டுக்கு வர்றீங்கன்னு அழைத்தால், டப்புன்னு விஷயத்தை புரிஞ்சுக்க வேண்டாமா! எதுக்காக கூப்பிடுவோம்.. செக்சுக்காகத்தான்!' என்று அவள் நேரடியாக அழைத்ததும் அவர் இதயம் தாறுமாறாய் துடித்தது. சிறிது நேரம் எடுத்த படபடப்பை அடக்கிக்கொண்டு நிதானமாக பேசினார்.
'நீ நினைக்கிற மாதிரி நான் 25, 30 வயசு பையன் இல்லே. நான் அறுபதை தாண்டிட்டவன். பெண்டாட்டியும் செத்துப்போயிட்டாள். வீட்டில் பழியேன்னு தனியாளா காவல் கிடக்கிறேன்' என்றார்.
'அப்படியா பரவாயில்லை. உங்களை மாதிரியானவங்களுக்குதான் எங்களை மாதிரி பெண்கள் தேவை. நீங்க என் வீட்டை தேடி வர வேண்டாம். நானே அங்கே வந்திடுறேன்' என்றாள்.
அவர் வேலைவெட்டியில்லாமல் சும்மாவே படுத்து கிடக்கிறவர் என்பதை அவள் புரிந்து கொண்டதும், அவ்வப்போது பேசினாள். அவரும் தொடக்கத்தில் ஏற்பட்ட கூச்சத்தில் இருந்து விடுபட்டார். சகஜமாக பேசத் தொடங்கினார்.
அவர் வசிக்கும் ஒதுக்குப்புற பகுதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாகிவிடும். உள்ளே இருப்பவர்கள் வீடுகளை பூட்டிக்கொள்வார்கள். ஏரியாவில் ஆள் நடமாட்டம் இருக்காது.
போனில் பேசிய அந்த பெண் அவரிடம் வீட்டு விலாசத்தை வாங்கிக்கொண்டாள். அன்று போன் செய்து 'சோப்பு, ஊதுவத்தி விற்பவள்போல் பிற்பகல் 3 மணிவாக்கில் வந்துவிடுகிறேன். கதவை மட்டும் தாழிடாமல் திறந்துவைத்துக்கொள்ளுங்கள்' என்றாள். அவரும் தயாரானார்.
அவள் இளம் பெண் அல்ல. நடுத்தரவயது கொண்டவள். திருமணமாகி குழந்தை பெற்றவள்போல் தோன்றினாள். அவர் மனைவியை இழந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்ததால், அவள் மூலம் 'மகிழ்ச்சி'யை மறுபிரவேசம் செய்ய நினைத்தார். அவளும் வந்த வேலையை முடித்துக்கொண்டு அவர் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிப்போனாள்.
மாதம் ஒருமுறை வீதம், இரண்டு தடவை காதும் காதும் வைத்ததுபோல் வந்துவிட்டு போனவள், மூன்றாவது தடவை அவரிடம் 'வயதாகிவிட்டதால் நீங்க பலகீனமாக இருக்கீங்க. இதுக்குன்னு சில வீரிய மாத்திரைகள் இருக்குது. அதை நான் கையோடு கொண்டு வந்திருக்கிறேன். பாலில் கலந்து சாப்பிடனும். பால் எடுத்துவாருங்கள்' என்றாள்.
அரை செம்பு அளவுக்கு பாலை எடுத்து அதில் சில மாத்திரைகளைபோட்டு கரைத்தாள். குடிக்க சொன்னாள். அவரும் ஆசை மேலிட குடித்தார்.
மகள் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வந்தாள். வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது. அப்பாவுக்கு போன் போட்டால் போன் உள்ளே கிடந்து அடித்துக்கொண்டிருந்தது. ஜன்னலோடு எட்டிப்பார்த்து அதிர்ந்தாள். அப்பா படுக்கையில் குப்புற விழுந்துகிடந்தார்.
மகள் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வந்தாள். வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது. அப்பாவுக்கு போன் போட்டால் போன் உள்ளே கிடந்து அடித்துக்கொண்டிருந்தது. ஜன்னலோடு எட்டிப்பார்த்து அதிர்ந்தாள். அப்பா படுக்கையில் குப்புற விழுந்துகிடந்தார்.
கதவை உடைத்து, நினைவிழந்ததுபோல் கிடந்த அவரை தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து, காப்பாற்றினார்கள். அவருக்கு அவள் பாலில் கலந்துகொடுத்தது தூக்க மாத்திரைகள். வீரிய மாத்திரையாக நினைத்து அவர் தூக்க மாத்திரையை கலந்து குடித்துவிட்டு நிலை குலைந்ததும், அவள் வீட்டில் இருப்பவைகளை சுருட்டிவிட்டு போய்விட்டாள்.
'ஒரு பொண்ணு புதுசா ஒரு பானத்தை விற்க வந்தாள். இலவசமாக குடிக்க தந்தாள். குடிச்சேன். அதுக்கு பின்னால என்ன நடந்ததுன்னு தெரியலை..!' என்று முதியவர் 'கப்சா' விட்டுக்கொண்டிருக்கிறார்.
நாளையே உங்களுக்கும் இப்படி ஒரு 'அழைப்பு வரலாம்..!'. மாட்டிக் காதீங்க..!!
-உஷாரு வரும்
-உஷாரு வரும்
No comments:
Post a Comment