Friday, June 5, 2015

எல்லோருக்கும் எங்கும் சில ரூல்ஸ்

எல்லோருக்கும் எங்கும் சில ரூல்ஸ் உண்டு. அவற்றில் சில அருமையாக வழிநடத்தும். சில நம்ம மிரட்டும். இங்கே சில நல்ல ஆசிரியருக்காண விதிகளை பகிர்ந்திருக்கிறார்கள்

1. பாடம் நடத்தையில் அதிகம் பேச மாட்டார். எதையும் சுருங்கச் சொல்லி எளிதில் விளங்க வைத்து விடுவார்.

2. கேள்விக்கு பதில் தெரியாத மாணவனை/மாணவியை தேடி பிடித்து எழுப்பிவிட்டு எல்லோர் முன்னும் நிற்க வைத்து அவமானபடுத்தி அழகு பார்க்க மாட்டார்.

3. படிப்பவன், படிக்காதவன், முதல் இருக்கை, கடைசி இருக்கை என்பதை வைத்து தன் மாணவர்களை கணக்கிட மாட்டார்.

4. எந்த மாணவனுக்கு அறிவுரை சொல்ல நினைத்தாலும் தனியாய் அழைத்து தன் பிள்ளைகளுக்கு சொல்வது போன்றே சொல்வார்.

5. வகுப்பில் 50 மாணவர்கள் இருந்தாலும் ஒவ்வொரு மாணவனின் குடும்ப பின்னணியையும் மிகச் சரியாக புரிந்து வைத்திருப்பார்.

6. அடிக்கும் போதும் வலிக்காதது போல் செல்லமாய் அடிப்பார்.

7. எவருக்கும் மக்கு என்ற பட்டம் தரமாட்டார். சிலருக்கு ஒரு முறை சொல்லிதந்தால் புரிந்து விடுவது, சிலருக்கு இரண்டு முறை சொல்லிதந்தால் புரிந்து விடும். அவ்வளவு தான் வித்தியாசம் என்பார்.

8. மாணவர்களை திட்டும் போது , தானும் மாணவர் பருவத்தை கடந்து வந்தவன் தான் என்பதை நினைவில் கொள்வார்.

9. வகுப்பில் மட்டும் ஆசிரியராகவும் வெளியுலகில் நண்பராகவும் இருப்பார்.

10. ஒரு போதும் எந்த ஒரு மாணவனின் மனதிலும் தாழ்வு மனப்பான்மையை விதைக்க மாட்டார்.

# எந்த ஆசிரியர் நடத்திய பாடம் நம் புத்தியிலும், அவர் பயிற்று வித்த விதம் நம் மனதிலும் நீங்கா இடம் பிடித்ததோ அவரே நல்லாசிரியர்.

No comments:

Post a Comment