Wednesday, July 1, 2015

கவலை இன்றி, மகிழ்ச்சி யுடன் வாழ

கவலை இன்றி, மகிழ்ச்சி யுடன் வாழ

1. Take a 10-30 minute walk every day. And while you walk, smile. It is the ultimate anti-depressant.

தினமும் 10 முதல் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதுவும் புன்னகையோடு! இவை இரண்டும் சிறந்த மனச்சோர்வு நீக்கும் மருந்துகள்!

2. Sit in silence for at least 10 minutes each day.

தினமும் 10 நிமிடம் அமைதியாக உட்காருங்கள்!

(செல்போன்ல பேசாம, Ipod ல பாட்டு கேக்காம, TV ல படம் பாக்காம, Laptop ல Blog எழுதாம! கொஞ்சம் கஷ்டமோ!)

3. When you wake up in the morning complete the following statement, “My purpose is to ______ today.”

காலையில் கண் விழிக்கும் போது, இன்று நான் ………. இதைச் செய்து முடிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள்.

4. Live with the 3 E’s — Energy, Enthusiasm and Empathy.

ஆற்றல், ஆர்வம், கருணை இவை மூன்றையும் கைக்கொள்ளுங்கள்

5.  Plan to read at least one book every month .

மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

6. Make time to practice meditation or prayer. They provide us with daily fuel and a mental center to focus on in our busy lives.

கடவுள் வழிபாட்டுக்கும், தியானத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள். நம் பரபரப்பான வாழ்க்கைப் பயணத்தில் மன ஒருமைப்பாட்டை வளர்க்க இவை உதவும்.

7. Spend more time with people over the age of 70 and under the age of 6.

6 வயதுக்குக் குறைவான குழந்தைகளிடமும், 70 வயதிற்கு அதிகமான முதியோரிடமும் அதிக நேரம் செலவழியுங்கள்.

(ஏன்னா இவர்கள் கடவுளின் செல்லப் பிள்ளைகள்…. கல் நெஞ்சம் அற்றவர்கள்)

8.Dream more while you are awake.

விழித்திருக்கும் போது நிறைய கனவு காணுங்கள்.

(கலாம் சொன்னது போல)

9. Try to eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுகளை விட இயற்கையாக மரம், செடிகளில் விளையும் உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

10. Drink green tea and plenty of water.

அதிகமாக தண்ணீர் மற்றும் மூலிகைத் தேயிலை அருந்துங்கள்

(இங்கு தண்ணீர் என்பது ”H2O” வை மட்டும் குறிக்கும்)

11. Try to make at least three people smile each day with your humor sense..

உங்கள் நகைச்சுவை உணர்வால், தினம் ஒருவரையாவது சிரிக்க வையுங்கள்.

12. Clear clutter from your house, your car, your desk and let new and flowing energy into your life .

கன்னா பின்னாவென்று கிடக்கும் உங்கள் வீடு, கார், மேசை ஆகியவற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள்.

13. Don’t waste your precious energy on gossip, OR issues of the past, negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive aspects of the moment.

தேவையில்லாத கிசு கிசுக்கள், ”மொக்கைகள்”, எதிர்மறை சிந்தனைகள், உங்களால் கட்டுப்படுத்த இயலாத நிகழ்வுகள் இவற்றில் உங்கள் பொன்னான நேரத்தினை வீணாக்காதீர்கள். நேர்மறை சிந்தனைகளில்உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள்.

14. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class, but the lessons you learn will last a lifetime.

வாழ்க்கைப் பாடத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்… அதை மறந்து விடுங்கள்! ஆனால் அது கற்றுத்தந்த படிப்பினையை ஒரு நாளும் மறவாதீர்கள்!

15. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a college going girl .

காலை உணவை ராஜா போலவும், மதிய உணவை ராணி போலவும், இரவு உணவை கல்லூரி மாணவி போலவும் உண்ணுங்கள்.

16. Smile and laugh more. It will keep the negative blues away.

எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருங்கள்!

(பாக்குறவங்க பைத்தியகாரன்னு சொன்னாக் கூட பரவாயில்ல… வசூல் ராஜா படத்துல பிரகாஷ்ராஜ் சிரிப்பாறே அது மாதிரி சிரிச்சுட்டே இருங்க)

17. Life isn’t fair, but it’s still good.

வாழ்க்கை எப்போதும் நியாயமானதல்ல எனினும் சிறந்தது.

18. Life is too short to waste time hating anyone.

வாழ்க்கை மிகவும் குறுகியது. மற்றவர்களை வெறுப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள்

No comments:

Post a Comment