Tuesday, May 19, 2015

தமிழன்...!

சென்னையில் புதிய கல்யாண் ஜூவல்லர்ஸ் திறப்பு விழாவுக்கு நடிகர்கள் அமிதாப் பச்சன், பிரபு,ஐஸ்வர்யா ராய்,நாகர்ஜுனா ஆகியோரின் வரவைக் காண பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்டு வந்து, நடிகர்களுக்கு கை காண்பித்தனர்.
- ‪#‎செய்தி‬

‪#‎எனது_கோபம்_இது_தான்‬
அறிவு கெட்ட ஜென்மமே,சூடு சொரணை வெக்கம் மானம் இல்லாத கூட்டமே.சினிமா கூத்தாடிகளை பார்க்க இவ்வளவு ஒற்றுமையா?

* 20 தமிழர்களின் உயிரை பறிக்கப்பட்ட போது,அதனை எதிர்த்து குறல் கொடுக்க வந்த கூட்டமா நீங்க?

* தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராட வந்த கூட்டமா நீங்க?

* தமிழ் நாட்டில் மின்வெட்டை எதிர்த்து போராட வந்தவர்களா நீங்கள்?

* மின் கட்டண உயர்வு,பஸ் கட்டண உயர்வு, அரிசி பருப்பு காய்கறி போன்ற விலை உயர்வை கண்டித்து போராட வந்த கூட்டமா நீங்க?

* ராணுவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த கூட்டமா நீங்க?

* தமிழ் நாட்டு மீனவர்களுக்காக நியாயகம் கேட்டு போராட வந்த கூட்டமா நீங்க?

* தமிழ் நாட்டில் மது கடைகளை அடைக்க கோரி,போராட வந்தவர்களா நீங்க?

இல்லை இல்லை இல்லை...

கூத்தாடிகளை பார்க்க வந்த வெக்கம் கெட்ட ஜென்மங்களின் கூட்டம் இது.சினிமாகாரனை பார்ப்பதற்கு வரும் ஆர்வம்,உன் தமிழ் ரத்தத்திற்காக வரவில்லயே.ஏன்டா தமிழா ஏன்?
நீ அந்த அளவுக்கு சினிமாவில் மயங்கிவிட்டாயா?
இது உனக்கே அவமானமாக தோன்றவில்லையா?

நீ இந்த சினிமாவையும், சினிமா கூத்தாடிகளையும் பார்ப்பதற்கு காட்டும் ஆர்வத்தை,ஏன் அநீதியை எதிர்த்து போராட காட்டுவதில்லை?

எல்லா மாநிலங்களிலும் சினிமாவை ஒரு பொழுது போக்காகவே பார்க்கிறார்கள். ஆனா நீ(தமிழன்) மட்டும் சினிமாவை உன் வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்திருப்பது தான் வேதனையாக இருக்கிறது. இதனால் தான் தமிழ் நாட்டை இன்று வரை சினிமாவின் ஆட்சில் விட்டுவிட்டோம்.சினிமா துறையே இன்று வரை தமிழனை ஆளுகிறது.

இதுவரை தமிழன் தமிழ் நாட்டில் முன்னேற வில்லை.ஆனா வேற்று மாநிலத்தவர் தமிழ் நாட்டில் முன்னேறி விட்டனர்.தமிழனிடம் உள்ள சினிமா போதையே இதற்கு காரணம்.

தமிழா நீ பொங்கி எழு.
வீரத்திற்கு பெயர் வாங்கியவன் நீ.
"சிந்தித்து செயல்படு தமிழா"

என் கோபம் நியாயமானது என்றால்,
இதே கோபம் உங்களுக்கும் இருக்கும் என்றால்,
முடிந்தவரை இந்த பதிவை SHARE செய்து நம் ஆதங்கத்தை வெளிப்படுத்துங்கள்.

வாழ்க தமிழ்...!
வளர்க தமிழன்...!

No comments:

Post a Comment