Tuesday, May 26, 2015

Stop eating magi noooodooooles!

Stop eating magi noooodooooles!
மேகி நூடுல்சுக்கு விரைவில் தடை? - படிப்பு மற்றும் நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் உப்பு இருப்பது கண்டுபிடிப்பு
புதுடெல்லி, மே 20- குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்சில் கற்றல், நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விவரம் தெரியவந்ததை அடுத்து விரைவில் அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. உணவின் ருசியை அதிகரிக்க மோனோசோடியம் குளுட்டோமேட் என்ற சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் மிக குறைந்த அளவு மட்டுமே சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.ஜி. 0.01 ppm அளவுக்கு உப்பு அனுமதிக்கப்பட்ட நிலையில், லக்னோ உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நடத்திய ஆய்வில் எம்.எஸ்.ஜி. அளவானது 17 ppm இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் உ.பி.யில் மேகிக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. அதிகளவு எம்.எஸ்.ஜி. உடலில் சேரும்போது கற்றல் திறன், இயல்பான நடத்தை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் தொடர்ந்து அதே உணவை சாப்பிடும் வகையில் மனித உடல் அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்புள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் "எங்கள் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளாகதான் எம்.எஸ்.ஜி. இருக்கின்றது" என கூறியுள்ளார். இதே நிறுவனம் தான் கைக்குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை கொடுக்கப்படும் ஊட்ட உணவுகளையும் தயாரித்து விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment